வாக்காளர்களின் ஆணையை அவமதித்த முன்னாள் எம்.பி.க்களை ராஜினாமா செய்யும்படி டி.ஏ.பி. இளைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பேராக்கில் பக்காத்தான் ஹராப்பானை (பி.எச்) விட்டுச் சென்ற புந்தோங் மற்றும் த்ரோனோ எம்.பி.க்களை வாக்காளர்களின் ஆணையை அவமதித்த காரணமாக ராஜினாமா செய்யுமாறு டி.ஏ.பி. இளைஞர்கள் வலியுறுத்தினர்.
இன்று ஒரு அறிக்கையில், டிஏபி இளைஞர் தலைவர் ஹோவர்ட் லீ அவ்விரு எம்.பி.க்களும் வாக்காளர்களின் நலன்களுக்காகத்தான் கட்சி தாவினர் என்று அளித்த காரணம், முற்றிலும் ஆதாரமற்றது என்றார்.
“எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளை எப்போது நிர்வாகம் செய்ய முடியாமல் போனது? பல ஆண்டுகளாக நீங்கள் பேராக்கில் எதிர் கட்சிகளாக இருந்துள்ளீர்கள். வாக்காளர்கள் உங்களை ஆதரித்து இருக்கின்றார்கள்.
“நீங்கள் இப்போது அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள். உங்களில் ஒருவர் இன்று மாநில அமைச்சரவையில் உறுப்பினராக உள்ளார். இது எல்லாம் மக்கள் உங்களை ஆதரித்ததால்தான் என்பதை மறக்க வேண்டாம்” என்று லீ கூறினார்.