ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், அனைத்து கடன்கள் மற்றும் நிதி திருப்பிச் செலுத்துதல்களுக்கு ஆறு மாத காலத்தை வங்கிகள் தள்ளிவைக்க பேங்க் நெகாரா மலேசியா வழிவகுத்துள்ளது.
ஏப்ரல் 1, 2020 முதல் ஆறு மாத காலத்திற்கு, தனிநபர்களுக்கும் SME கடன் பெற்றவர்களுக்கும் / வாடிக்கையாளர்களுக்கும் வங்கி நிறுவனங்கள் அனைத்து கடன்கள் / நிதி திருப்பிச் செலுத்துதல் / கொடுப்பனவுகள், அசல் மற்றும் வட்டி (கிரெடிட் கார்டு தவிர) ஆகியவற்றில் ஒரு தற்காலிக நிறுத்திவைப்பை (automatic moratorium) வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
கோவிட்-19 பாதிப்பின் விளைவாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SME) மற்றும் தனிநபர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதே இதன் குறிக்கோள் என்று பேங்க் நெகாரா மலேசியா துணை ஆளுநர் ஜெசிகா செவ் இன்று அனைத்து வங்கி நிறுவனங்களுக்கும் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த வசதிக்கு தகுதி பெற, ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு முன், 90 நாட்களுக்கு மேலான நிலுவைத் தொகையை கொண்டிருக்கக்கூடாது மற்றும் கடன் ரிங்கிட் நாணயத்தில் இருக்க வேண்டும் என்பதே.
“இடைநிறுத்தப்பட்ட காலப்பகுதியில் இடைநிறுத்தப்பட்ட கடன் அல்லது திருப்பிச் செலுத்துதல் எவ்வாறு நடத்தப்படும் என்பதற்கான போதுமான தகவல்களை வங்கி நிறுவனங்கள் தனிநபர்களுக்கும் SMEகளுக்கும் வழங்க வேண்டும். அதோடு, கடன் பெற்றவர்களுக்கு / வாடிக்கையாளர்களுக்கு இடைக்கால காலத்திற்குப் பிறகு திருப்பிச் செலுத்துதலை மீண்டும் தொடங்குவதற்கான வழிமுறைகளையும் அளிக்க வேண்டும். குறிப்பாக கடன் பெற்றவர்களுக்கு / வாடிக்கையாளர்களுக்கு இடைக்கால காலத்திற்குப் பிறகு திருப்பிச் செலுத்துதல் / கொடுப்பனவுகளைச் சந்திப்பதில் இன்னும் சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்று அவர்கள் எதிர்பார்த்தால் அவர்களுக்கு செலுத்துதலை தொடங்குவதற்கான முறையான வழிகள் வழங்கப்பட வேண்டும் என்று பேங்க் நெகாரா மலேசியா கடிதத்தில் கூறியுள்ளது.

























