நாட்டில் கோவிட்-19 பதிப்புகளின் எண்ணிக்கை இன்று நண்பகல் வரை 1,796-ஆக உயர்ந்தது.
பிரதமர் முகிதீன் யாசின் தன் நேரடி உரையில், இன்று 172 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, இன்னும் மோசமான நிலை வரக்கூடும் என்றும் எச்சரித்தார்.
மேலும் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும், இதனால் இறப்பு எண்ணிக்கை 17ஆக உயர்ந்து உள்ளது என்றும் அவர் கூறினார்.
“நிலைமை இன்னும் கடினமாகக் கூடும். கோவிட்-19 என்பது நாம் இதற்கு முன்பு சந்திக்காத ஒரு நோய். நம் நாட்டில் மட்டுமல்ல, உலகிலும் பரவியுள்ள இந்த ஒரு நோயால் கண் சிமிட்டலில் நம் வாழ்க்கை முறை மாறக்கூடும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை”.
“நோய்த்தொற்றின் பரவல் விரைவானது. இன்று, உலகம் முழுவதும் 422,829 பேர் பாதிக்கப்பட்டு, 18,907 பேர் இறந்துள்ளனர்” என்று அவர் கூறினார்.