ஸ்ரீ பெட்டாலிங் தப்லீக் கூட்டத்துடன் இணைக்கப்பட்ட 63 வயது நபர் நாட்டின் 21வது கோவிட்-19 மரணத்தை பதிவிசெய்துள்ளார்.
சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா அந்த நபரை ‘நோயாளி 1,588’ என அடையாளம் காட்டினார். பாதிக்கப்பட்டவருக்கு நீண்டகால நோய்களின் வரலாறு இருந்ததுள்ளதாகத் தெரிகிறது.
அறிகுறிகளை உருவாக்கிய பின்னர் மார்ச் 22 அன்று அந்த நபர் பரிசோதிக்கப்பட்டு, பின், மார்ச் 23 அன்று கெடாவின் அலோர் செட்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
“சிகிச்சையின் போது, அவரது உடல்நிலை மோசமடைந்து, மார்ச் 26 அன்று அதிகாலை 4 மணிக்கு அவர் காலமானார். சுகாதார அமைச்சு அவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளது” என்று நூர் ஹிஷாம் கூறினார்.