கோவிட்-19: 80 சுகாதார ஊழியர்கள் பாதிப்பு

80 சுகாதார அமைச்சின் (MOH) உறுப்பினர்கள் கோவிட்-19 கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்துக் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

MOH சுகாதார நிலையத்தில் COVID-19 நோயாளிகளை கையாளும் காரணமாக நோய்த்தொற்று இல்லை என்று விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

“இருப்பினும், அனைத்து சுகாதார மற்றும் முன் வரிசை உறுப்பினர்களும் தங்கள் கைகளை சுத்தமாக வைத்திருப்பது, கூடல் இடைவெளியைக் கடைப்பிடிப்பது மற்றும் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு உபகரணங்களை அணிவது நல்லது என்பதால் அவ்வாறான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அவர் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.

தப்லீக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளனர். அதில் MOH உறுப்பினர்களும் இருந்துள்ளனர். இதுவே பெரும்பாலான MOH உறுப்பினர்களின் தொற்றுநோய்களுக்கான தொடர்புடைய காரணம் என்று நேற்று, டாக்டர் நூர் ஹிஷாம் COVID-19 குறித்த தினசரி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அதைத்தவிர, மற்ற காரணங்கள், வெளிநாட்டு பயணங்களும் மற்றும் COVID-19-ல் பாதிக்கப்பட்ட குடும்ப தொடர்புகளும் காரணங்களாக உள்ளன என்றும் தெரிவித்தார்.