ஈப்போ மருத்துவமனையில் நெரிசலைக் குறைக்க டிரைவ்-த்ரு (drive-through) முயற்சி

ஈப்போ மருத்துவமனையில் நெரிசலைக் குறைக்க ஊடோட்ட ஆய்வு (டிரைவ்-த்ரு/drive-through: ஒருவரின் காரை விட்டு வெளியேறாமல் ஒருவருக்கு சேவை செய்யக்கூடிய இடம் அல்லது வசதி) முயற்சியைத் தொடங்குகிறது.

ஈப்போவில் உள்ள ராஜா பெர்மாய்சுரி பைனுன் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ முன்னணி குழு, கோவிட்-19 பாதிப்பின் போது கிளினிக்கில் நெரிசலைக் குறைப்பதற்காக டிரைவ்-த்ரு முயற்சியின் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை சோதனைகளை நடத்தியுள்ளது.

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு கடுமையான மஞ்சள் காமாலை ஏற்படுவதைப் கண்காணிக்க வேண்டிய பரிசோதனை அது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

நேற்று, டாக்டர் சுவா பீ சிம் தலைமையிலான குழு, கிரீன் டவுன் சுகாதார கிளினிக்கில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி 63 குழந்தைகளை பரிசோதனையிட்டது.

மஞ்சள் காமாலை அளவை தீர்மானிக்க மருத்துவமனையின் குழந்தை மருத்துவ மையம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கையடக்க டிரான்ஸ்கட்டானியஸ் பிலிரூபினோமீட்டரை (Transcutaneous Bilirubinometer (TCB) பயன்படுத்துகிறது என்றார்.

டிரைவ்-த்ரூ முயற்சியைப் பொறுத்தவரை, நூர் ஹிஷாம் இது கிளினிக்கில் கூட்டம் அதிகமாக இருப்பதைத் தடுக்கும் என்றும் கூடல் இடைவெளியை உறுதி செய்யும் என்றும் கூறினார்.