சவுதியில் உள்ள மலேசியர்களை மீண்டும் நாட்டிற்கு கொண்டுவரும் பணிகள் ஏற்பாடு

ரியாத்தில் உள்ள மலேசிய தூதரகம் மற்றும் சவுதி ஏர்லைன்ஸ் தற்போது சவூதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களை மீண்டும் அழைத்து வருவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இன்று ஒரு அறிக்கையில், தூதரகம், அங்குள்ள மலேசியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க முயற்சிக்கிறது என்றும், அவர்களை வீட்டிற்கு அழைத்து வர விமானத்தை ஏற்பாடு செய்யும் என்றும் கூறியுள்ளது.

வீடு திரும்ப விரும்பும் மலேசியர்கள் தங்கள் பெயர்கள், பாஸ்போர்ட் எண்கள், தொலைபேசி எண்கள் மற்றும் அவர்கள் வெளியேற விரும்பும் விமான நிலையங்கள் (ரியாத் அல்லது தம்மம்) போன்ற குறிப்புகளை இங்குள்ள இணைப்பு மூலம் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

“இது தூதரகம் மற்றும் சவுதியா ஏர்லைன்ஸ் மலேசியர்களை நாடு திரும்பச் செய்வதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், சவூடியா ஏர்லைன்ஸ் பயண தேதி, விமான டிக்கெட்டுகளின் விலை மற்றும் டிக்கெட்டுகளை வாங்கும் செயல்முறை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும்.