ஏப்ரல் 1 முதல் ‘ஒரு காருக்கு ஒரு நபர்’ விதி

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் இரண்டாம் கட்டத்தின் கீழ், தனியாருக்குச் சொந்தமான காரில் இருப்பவர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் கட்டுப்படுத்தும்.

பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி, ஏப்ரல் 1 முதல் ஒரு நபர் மட்டுமே காரில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்று கூறியுள்ளார்.

“ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த இரண்டாம் கட்டம் தொடங்கும். நடமாட்டக் கட்டுப்பாட்டின் அடிப்படையில் விதிமுறைகள் கடினமாக்கப்படும்.

“இந்த இரண்டாம் கட்டத்தின் கீழ், பொது நடமாட்டம் இன்னும் அனுமதிக்கப்படுகிறது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்”.

“ஆனால் முன்னர் குறிப்பிட்டபடி, காரைப் பயன்படுத்தும் போது, நீங்கள் மளிகை சாமான்களை வாங்க அனுமதிக்கப்படுவீர்கள், ஆனால் அது ஒரு காருக்கு ஒரு நபர் மட்டுமே பயணிக்க முடியும்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

முன்னதாக, தேசிய பாதுகாப்பு கவுன்சில் “குடும்பத் தலைவர்” மட்டுமே பொருள் வாங்க மளிகை கடைக்கு அனுமதிக்கப்படுவர் என்று கட்டளையிட்டது.

இதற்கிடையில், பொதுமக்கள் வெளியே செல்வதற்கு பதிலாக ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் கூறப்பட்டது.

இருப்பினும், விநியோக ஊழியர்களுடன் பொதுமக்கள் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

“வேலி மீது உணவை விட்டுவிடவும், விநியோக ஊழியர்கள் பின்னர் (வாங்குபவரை) தொடர்பு கொள்ளவும் மக்களை ஊக்குவிக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

ஆரோக்கியமான நபர்களுக்கும் கொடிய கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையிலான தொடர்பைக் கட்டுப்படுத்த இரண்டாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாடு, ஏப்ரல் 1 முதல் 14 வரை நீடிக்கும்.

நேற்று நண்பகல் நிலவரப்படி, மலேசியாவில் கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்ட 2,470 பாதிப்புகள் பதிவாகியுள்ளன; 35 மலேசியர்கள் மரணமுற்றுள்ளனர்.