மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில், இன்று நண்பகல் 156 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகி மொத்தம் 2,626 பாதிப்புகள் உள்ளன என்று சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மூன்று புதிய இறப்புகளையும் அவர் அறிவித்தார், இதில் நேற்றிரவு அறிவிக்கப்பட்ட ஒன்றும் உட்பட்டுள்ளது. இது இறந்தவர்களின் எண்ணிக்கை 37 பேராக உயர்த்தியுள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) நோயாளிகளின் எண்ணிக்கையும் 73-ல் இருந்து 94 ஆக உயர்ந்துள்ளது.
ஐ.சி.யுவில் வென்டிலேட்டர்களில் சுவாசிக்க வேண்டியவர்களும் 52-ல் இருந்து 62 ஆக அதிகரித்துள்ளனர்.
நூர் ஹிஷாம் இன்று அதிக எண்ணிக்கையிலான தினசரி குணப்படுத்தப்படுவர்களின் எண்ணிக்கை 91 பேர் என்று தெரிவித்தார், அவர்கள் அனைவரும் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இது மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 479 என்று பதிவாக்கியுள்ளது.