WHO – ஒரு பெரிய அளவிலான தொற்றுக்கு தயாராக நமக்கு நேரத்தை தருகிறது

உலக சுகாதார அமைப்பின் (WHO) மேற்கு பசிபிக் பிராந்திய இயக்குனர் டாக்டர் தகேஷி கசாய், கோவிட்-19ஐ கையாள்வதில் பொதுவான செயற்பாடுகள் அதாவது நோயாளிகளைக் கண்காணித்தல் மற்றும் தனிமைப்படுத்துதல் போன்ற செயல்கள், அபாயங்களை முற்றிலுமாக அகற்றாது என்றுள்ளார்.

“இச்செயல்களின் மூலம் ஒரு நாடு பெரிய அளவிலான சமூக பரவலுக்குத் தயாராகும் நேரத்தை சற்று தள்ளிப்போடுகிறது”.

“பொதுவான செயல்முறைகள் என்னவென்றால், பாதிப்புகளை முன்கூட்டியே அடையாளம் காண்பது, தனிமைப்படுத்துவது, சிகிச்சையளிப்பது மற்றும் தொடர்புகளைக் கண்டுபிடிப்பது, அவற்றை (நோயாளிகளை) தனிமைப்படுத்துவது போன்றவை ஆகும்”.

“ஆனால், தொற்றுநோய் தொடரும் வரை ஆபத்து நீங்காது. மாறாக, இந்த நடவடிக்கைகள் ஒரு பெரிய அளவிலான சமூகப் பரவலுக்குத் தயாராவதற்கு நமக்கு நேரத்தை தருகிறது” என்று பிலிப்பைன்ஸ் மணிலாவை தளமாகக் கொண்ட கசாய், இன்று ஒரு ஆன்லைன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.