“உங்கள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யும் தியாகத்திற்கும், அமைச்சு நன்றி கூற கடமைப்பட்டுள்ளது”.

ஜனவரி 25ஆம் தேதி முதல் கோவிட்-19 பாதிப்பு வெளிவந்ததிலிருந்து, 67 நாட்களாக, உலகளவில் ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று குவிக்கும் கிருமியை எதிர்த்துப் போராடுவதற்கு முன்னணியில் சுகாதாரப் பணியாளர்கள் உருவெடுத்துள்ளனர்.

அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தைப் பாராட்டி, சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, வெள்ளை மற்றும் நீல நிற உடையணிந்த ஹீரோக்களுக்கு தனது தனிப்பட்ட பெருமையை வெளிப்படுத்தியுள்ளார். உலகளாவிய தொற்றுநோயை எதிர்கொண்டு போராடும் அவர்களை, வியக்கத்தக்கவர்கள் என்று அறிவித்துள்ளனர்.

பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள ஒவ்வொரு சுகாதார ஊழியர்களும் மிகச்சிறந்த அர்ப்பணிப்பைக் காட்டியுள்ளதாகவும், COVID-19ஐ எதிர்த்துப் போராடுவதற்கு அவர்களின் சிறந்த முயற்சிகளை வழங்கியதாகவும் அவர் கூறினார்.

“பலர் தங்கள் அன்புக்குரியவர்களை வீட்டிலேயே விட்டுவிட்டு, நோயுற்றவர்களுக்கு உதவுவதற்காக முன்னணியில் இருக்க தங்கள் நேரத்தையும் வசதியையும் தியாகம் செய்துள்ளனர். உங்கள் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யும் தியாகத்தையும், அமைச்சகம் பாராட்டுகிறது.

“உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று அவர் இன்று தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

தற்போதைய நிலைமை அனைவருக்கும் ஒரு புதிய அனுபவமாக இருந்தாலும், தேசிய சுகாதார அமைச்சு எந்தவொரு சாத்தியத்திற்கும் திட்டமிட்டு தயார் செய்துள்ளது என்றார்.

அனைத்து மட்டங்களிலும் உள்ள சுகாதாரத் தொழிலாளர்கள் மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்திய டாக்டர் நூர் ஹிஷாம், பொது சுகாதாரம் நாட்டில் முன்னுரிமையான ஒன்றாக இருப்பதால், சம்பந்தப்பட்ட அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ததாக நம்புவதாகக் அவர் கூறினார்.

ஒரு அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர் நூர் ஹிஷாம், மலேசியா வரலாற்றில் இதற்கு முன் அனுபவிக்காத மிகவும் கடினமான காலப்பகுதியைக் கடந்து வருவதாகவும், இது ஒவ்வொரு குடிமகனையும் பாதித்திருப்பதாகவும், அதைச் சமாளிக்க புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் (நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு உட்பட) கூறினார்.

முன்னணி பணியாலளர்களாக பங்களித்த அனைத்து தரப்பினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

“நல்லுள்ள பங்களிப்பாளர்களுக்கு, சிறிய மற்றும் பெரிய, உள்ளூர் மற்றும் சர்வதேச தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து இத்தகைய தாராள மனப்பான்மையைக் காண எங்களுக்கு பெறுமையாக உள்ளது. முன்னணி பணியாலளர்களுக்கு, நான் நன்றி சொல்கிறேன்” என்றார்.

COVID-19 மேலும் பரவாமல் தடுப்பதற்கும், மலேசியாவில் 37 உயிர்களைக் கொன்ற தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் வெற்றியை உறுதி செய்வதற்கும் பொதுமக்கள் மீது மிகுந்த நம்பிக்கை இருப்பதாக டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

“வீட்டுக்குள் தங்கியிருப்பதன் மூலம் பொதுமக்கள் எம்.சி.ஓவைக் கடைப்பிடிப்பார்கள் என்று தான் நம்புவதாக அவர் கூறினார். கோவிட்-19 பரவல் வளைவைத் தட்டையாக்குவதில் மக்களுக்கு முக்கிய பங்கு உண்டு, இதனால் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய எங்களுக்கு அதிக நேரம் தரப்படுகிறது”.

“ஒவ்வொரு மலேசியரும் இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் தங்கள் பங்கை வகிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

  • பெர்னாமா