கோவிட்-19: மலேசியாவில் மேலும் 6 இறப்புகள், 140 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன

கோவிட்-19 ல் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. நேற்று பதிவான 37 இறப்புகளில் இருந்து இன்று 43 ஆக உயர்ந்துள்ளது.

தினசரி பாதிப்புகளின் அதிகரிப்பு 140 ஆக பதிவாகி மொத்தம் 2,766 ஆக இருக்கிறது.

மொத்தம் 94 நோயாளிகள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) உள்ளனர். இவர்களில் 60 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.

இன்று தனது ஊடக மாநாட்டில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஆறு புதிய மரணங்கள் ஐந்து மலேசிய குடிமக்கள் மற்றும் ஒரு இந்தோனேசிய குடிமகனை உள்ளடக்கியது என்று அறிவித்தார்.

கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட அனைவருக்கும் நீண்டகால கடுமையான நோயின் வரலாறு உள்ளவர்களாக இருக்கின்றனர்.

மற்ற வயதுக் குழுக்களுடன் ஒப்பிடும்போது அதிக கோவிட்-19 பாதிப்பு கொண்ட இரண்டு வயதுக் குழுக்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

இந்த இரு குழுக்களும் 26 முதல் 30 வயது வரையிலும் 56 முதல் 60 வயது வரையிலும் உள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.