நடமாட்டக் கட்டுப்பாட்டின் இரண்டாம் கட்டம், மலேசியர்களுக்கு இக்கட்டான காலமாக இருக்கும்

இன்று தொடங்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (MCO) இரண்டாம் கட்டம், கோவிட்-19 நோய்த்தொற்றின் சங்கிலியை உடைப்பதற்கான முயற்சிகள் வெற்றிகரமானதா இல்லையா என்பதை மலேசியர்கள் தீர்மானிக்க ஒரு முக்கியமான காலகட்டமாகும்.

அதன் செயல்திறன் நிச்சயமாக மக்களின் ஒழுக்கத்தின் அளவைப் பொறுத்தது. இதன்மூலம் பொதுமக்கள் தொடர்ந்து வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அடிக்கடி தங்கள் கைகளைக் கழுவ வேண்டும்; கூடல் இடைவெளி தூரத்தை பின்பற்ற வேண்டும்.

இணக்க விகிதம் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருந்தாலும், MCOஐ மீறியதற்காக கைது செய்யப்படும் நபர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர் என்றும், இணங்காததற்கு முட்டாள்தனமான சாக்குகளை வழங்குபவர்களும் இருக்கிறார்கள் என்றும் அறியப்படுகிறது.

மார்ச் 18 முதல் MCO-வின் முதல் கட்டத்தின் இரண்டு வாரங்களில், தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை சில நேரங்களில் மேல்நோக்கிச் செல்லக்கூடும், சில சமயங்களில் சமநிலையில் இருக்கக்கூடும். அதே நேரத்தில் தினசரி குணமடைந்து வெளியேற்றப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயினும்கூட, இன்னும் அதிகமான பாதிப்புகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், ஏப்ரல் 14 வரையான MCOவின் இரண்டாம் கட்டத்தில், விதிமுறைகளை கடினமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை.

இரண்டாம் கட்டத்தில் புதிய விதிகள்:

இரண்டாம் கட்டத்தின் கீழ், பல்பொருள் அங்காடிகள் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் உட்பட தினசரி அத்தியாவசிய பொருட்களை விற்கும் அனைத்து வணிக வளாகங்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

உணவகங்கள், ஸ்டால்கள் மற்றும் உணவு விநியோக சேவைகளும் இரண்டாம் கட்டத்தின் போது அதே இயக்க நேரங்களை கடைபிடிக்க வேண்டும்.

இன்று நடைமுறைக்கு வரும் வகையில், வாய் மற்றும் மூக்கு கவசங்களின் புதிய உச்சவரம்பு விலையை தலா RM1.50 என அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.

கிருமி பரவுவதைத் தடுக்க, வெளிநாட்டிலிருந்து திரும்பும் அனைத்து மலேசியர்களையும் ஏப்ரல் 3 முதல் தேர்வுசெய்யப்பட்ட சிறப்பு இடங்களில் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என்ற முடிவிலும் அரசாங்கத்தின் தீவிரத்தன்மையை காணலாம்.

ரமலான் மாதமும், இந்த ஆண்டு ஹரி ராயாவும் வழக்கமான முறையில் கொண்டாடப்படுமா என்பதை அடுத்த 14 நாட்கள் முடிவு செய்யும்.

இஸ்மாயில் சப்ரி: “மூன்றாவது எம்.சி.ஓ, நான்காவது எம்.சி.ஓ இருக்காது என்பதை உறுதிப்படுத்தக்கூடியவர்கள், மக்களே.

“அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒவ்வொரு உத்தரவு மற்றும் விதிமுறைகளுக்கு தொடர்ந்து இணங்கினால், நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிக்கம் குறித்து கவலைப்பட தேவையில்லை என்று நான் நம்புகிறேன்” என்றார்.