பலர் முட்டையை பெரும் அளவில் வாங்கி குவித்து வைப்பதால் பல மலேசியர்களுக்கு முட்டைகள் கிடைப்பதே கடினமாக உள்ளது.
இப்படி அதிகமாக வாங்குபவர்களின் அணுகுமுறை காரணமாக இந்த நாட்டில் முட்டை பற்றாக்குறை ஏற்படுகிறது.
மலேசியாவின் கால்நடை விவசாயிகள் சங்கத்தின் (FLFAM) தலைவர் டான் சீ ஹீ கருத்துப்படி, ஒவ்வொரு மலேசிய குடும்பமும் சாதாரண நேரங்களில் பொதுவாக வாரத்திற்கு 10 முதல் 30 முட்டைகள் வரை வாங்குகின்றன. இப்போது மக்கள், வாரத்திற்கு 120 முட்டைகள் வரை வாங்குகிறார்கள்.
“அவர்கள் இப்போது முட்டைகளை விரும்பு சாப்பிட வாங்கவில்லை, ஆனால் அவற்றை பெரும் அளவில் வைத்துக் கொள்ள வாங்குகிறார்கள்” என்று அவர் கூறினார்.
பண்ணையை விட்டு வெளியேறிய பின் முட்டைகள் அறை வெப்பநிலையில் வைத்தால் பொதுவாக ஒரு வாரம் வரை நீடிக்கும் என்று டான் கூறினார். குளிர்சாதன பெட்டியில் வைத்தால் இது ஒரு மாதம் வரை நீடிக்கும்.
நாடு முழுவதும் சுமார் 300 முட்டை உற்பத்தியாளர்கள் ஒரு நாளைக்கு 40 மில்லியன் முட்டைகள் அல்லது ஒரு நபருக்கு ஒரு முட்டைக்கு என்ற கணக்கில் உற்பத்தி செய்யலாம் என்று அவர் கூறினார்.
சராசரியாக, ஒரு மலேசியர் ஆண்டுக்கு 370 முட்டைகளை சாப்பிடுகிறார் என்று டான் கூறுகிறார்.
“மக்கள் பீதியடைந்து முட்டையை வாங்கி வைக்காவிட்டால், சந்தையில் முட்டை வழங்தல் போதுமானதாக இருக்கும். உண்மையில், தேவையானதை விட அதிகமாகவே நாங்கள் வழங்குகிறோம்,” என்று அவர் கூறினார்.
வெறுமனே வாங்கி, பதுக்கி வைக்கும் நடைமுறை நிறுத்தப்படாவிட்டால் முட்டை உற்பத்தியை அதிகரிப்பதில் அர்த்தமில்லை என்றார்.