பகாங்கின் தெங்கு ஹசனல் இப்ராஹிம் ஆலம் ஷா தனது ஆறு மாத அரச சம்பளத்தை மாநில கோவிட்-19 நிதிக்கு நன்கொடையாக பங்களித்துள்ளார்.
இன்று ஒரு ஊடக அறிக்கையில், தெங்கு ஹசனல் (புகைப்படம்) இந்த நிதிக்கான நன்கொடைகள் விரைவில் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படும் என்று நம்புவதாகக் கூறினார்.
தெங்க்கு ஹசனல் பகாங்கின் மக்களின் ஆரோக்கியத்தையும் அவர்களது குடும்பத்தினரையும் கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். மேலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காலத்தில் அரசாங்கம் விதித்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மலேசியாவில், குறிப்பாக பகாங்கில் உள்ள கோவிட்-19 நோயாளிகள் விரைவில் குணமடையவும், முன்னணி பணியில் இருப்பவர்களுக்காகவும், அவர்களின் கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதற்கான வலிமையும் நல்ல ஆரோக்கியமும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவும் அவர் பிரார்த்தனை செய்வதாக மேலும் கூறியுள்ளார்.