இந்தியாவில் தப்லீக் கூட்டத்தில் கலந்து கொண்ட மலேசிய பெண்ணுக்கு கோரோனா கிருமி பாதிப்பு

டெல்லியில் நடந்த சர்வதேச தப்லீக் கூட்டத்தில் பங்கேற்ற 22 வயது மலேசிய பெண் ஒருவர் கோவிட்-19க்கு சாதகமாக சோதனை செய்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

கடந்த 10 நாட்களில் பரிசோதிக்கப்பட்ட 20 வெளிநாட்டவர்களில் இந்தப் பெண்ணும் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவர் தற்போது ஜிஹர்கண்டின் ராஜேந்திரா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸில் சிகிச்சை பெற்று வருகிறார். இது அம்மாநிலத்தின் முதல் கோவிட்-19 பாதிப்பாகும்.

அந்த பெண் மார்ச் 17 அன்று டெல்லியில் இருந்து ஜிஹர்கண்டின் தலைநகர் ராஞ்சிக்கு ரயிலில் பயணம் செய்துள்ளார்.

ராஞ்சியில் மக்கள் அடர்த்தியான ஹிந்த்பிரி பகுதியில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அங்கு அந்த பெண் மசூதிக்கு அருகிலுள்ள ஒரு தனியார் இல்லத்தில் பல நாட்கள் தங்கியிருந்தார். இப்பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் சோதனையிடப்படுகிறார்கள்,” என்று அறிக்கை கூறியுள்ளது.

அந்தப் பெண்ணையும் அடங்கிய ஒரு குழு, நகரத்திற்கு வந்ததை நிர்வாகத்திற்குத் தெரிவிக்கவில்லை உள்ளூர் காவல்துறையினரின் கூறியுள்ளனர்.