ரமலான் பஜார் குறித்து இதுவரை எந்த முடிவும் இல்லை

நாடு கோவிட்-19 பாதிப்பை எதிர்கொண்டுள்ளதால் ரமலான் பஜாரின் செயல்பாட்டைத் தொடர முடிவு செய்துள்ளதாக வெளியான ஊடக அறிக்கைகளை மத்திய பிரதேச அமைச்சர் அன்னுவார் மூசா மறுத்துள்ளார்.

நகர மக்களுக்கு ரமலான் பஜார் நடத்தலாமா, இல்லையா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று அன்னுவார் கூறினார்.

இது குறித்து முடிவெடுப்பதற்கு முன்னர், இந்த வெள்ளிக்கிழமை உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து ஒரு கருத்தை கேட்பதாக அவர் கூறினார்.

“ரமலான் பஜார் நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, கோலாலம்பூரில் ரமலான் பஜார் நடத்தப்பட்டால் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அன்வார் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிந்த பிறகும், பொதுமக்கள் வழக்கம் போல் ஒன்றுகூடுவதற்கு சுதந்திம் உள்ளது என்று எதிர்பார்க்க வேண்டாம் என்று அவர் கூறினார்.

“ரமலான் பஜாரை நாம் நடத்த விரும்பினால் அதை எவ்வாறு இயக்குவது என்பதை நாங்கள் ஆராய வேண்டும், சில இடங்களில் அதை செய்ய முடியாது” என்று அன்னுவார் கூறினார்.

இதற்கிடையில், கோவிட்-19 பாதிப்பை எதிர்கொள்ளும் தற்போதைய சூழ்நிலையில், இந்த விஷயத்தில் எந்தவொரு முடிவும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் (எம்.கே.என்) மற்றும் சுகாதார அமைச்சின் (எம்ஓஎச்) கருத்துக்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

எனவே, இந்த விடயத்தில் இன்னும் ஒரு முடிவு எடுக்கப்படாத்தால் சில தரப்பினர் இந்த பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என்று அன்னுவார் கேட்டுக்கொண்டார்.