மலேசியாவில் 142 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது மொத்தம் 2,908 தொற்றுநோய்களைக் கொண்டுவந்துள்ளதாக சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஹிஷாம் இரண்டு புதிய இறப்புகளையும் அறிவித்தார். டூதனால் இறப்பு எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
இன்றுவரை, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யூ) 102 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது கூடுதலாக 8 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
102 நோயாளிகளில் 66 பேர் வென்டிலேட்டர்களில் வைக்கப்படுகிறார்கள் – இது நேற்றை விட ஆறு பேர் அதிகம்.
புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஹிஷாம், 108 கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இது மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 645 ஆக கொண்டுவந்துள்ளது.