MCO – வீட்டிலிருந்து 10 கி.மீ. சுற்றளவிற்கு மேல் பயணிக்க தடை

மளிகைப் பொருட்கள், உணவு அல்லது மருத்துவ சிகிச்சைகள் வாங்க வீடுகளை விட்டு வெளியேறும் நபர்கள் தங்கள் வீட்டிலிருந்து 10 கி.மீ சுற்றளவிற்கு மேல் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களையும் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்த மற்றொரு உத்தரவுடன் இது இணைக்கப்பட்டுள்ளதால் இது நாடு தழுவிய அளவில் பொருந்தும்.

“உணவு, தினசரி தேவைகள், மருந்து அல்லது உணவுப்பொருட்களை வாங்குவதற்கு, ஒருவரது நடமாட்டம், அவர் வசிக்கும் இடத்திலிருந்து பத்து கிலோமீட்டருக்கு மிகாமல் இருக்கும் ஒரு இடத்திற்கு அல்லது அவரது குடியிருப்புக்கு அருகிலுள்ள ஒரு இடத்திற்கு மட்டுமே இருக்கும்” என்று வர்த்தமானி கூறுகிறது.

உடல்நலம் மற்றும் மருத்துவ சிகிச்சையைப் பெறுவதில் இதையே பயன்படுத்தப்படுகின்றன.

இரண்டு சூழ்நிலைகளிலும், ஒரு நபர் தனியாக பயணிக்க வேண்டும், தவிர வேறு யாரும் அவருடன் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இது ஏப்ரல் 1 முதல் 14 வரை நடைமுறையில் உள்ளது.

விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது RM1,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இதற்கிடையில், முகமூடிகளுக்கான (three-ply surgical masks) உச்சவரம்பு சில்லறை விலையை ஒரு பெட்டிக்கு RM75 அல்லது ஒரு துண்டுக்கு RM1.50 ஆக முறைப்படுத்தப்பட்டுள்ளது.