கசானா நேஷனலின் (Khazanah Nasional Bhd) தலைவராக பிரதமர் முகிதீன் யாசின் நியமிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று ஒரு அறிக்கையில், நிதி அமைச்சர் தெங்கு ஜப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் மற்றும் முகமது அஸ்லான் ஹாஷிம் ஆகியோரும் அதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த நியமனங்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும் MOF தெரிவித்துள்ளது.
மலேசியாவின் முதன்மை நிதி நிர்வனமாக தனது ஆணையை நிறைவேற்றுவதில் புதிதாக நியமிக்கப்பட்ட குழுவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக கசானா ஒரு தனி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டாக்டர் மகாதீர் முகமட் 25 மார்ச் 2020 முதல் தலைவர் மற்றும் குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதாகவும் அது அறிவித்திருந்தது.
“நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் சார்பாக, கசானா மகாதீர் தலைவராக இருந்த காலப்பகுதியில் அவரது தலைமை, வழிகாட்டுதல் மற்றும் பங்களிப்புகளுக்கு எங்கள் நன்றியையும் பாராட்டையும் பதிவு செய்ய விரும்புகிறேன்” என்று கசானா கூறியுள்ளது.