கோவிட்-19 பாதிப்பை எதிர்த்துப் போராட உதவும் முயற்சியாக சிங்கப்பூர் அரசு மலேசியாவுக்கு 5,000 சோதனை கருவிகளை நன்கொடையாக அளித்தது.
சிங்கப்பூர் உயர் கமிசன் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசியா தனது இருப்புகளை அதிகரிக்க உதவும் வகையில் இதனை கேட்டு அந்த அண்டை நாட்டை தொடர்பு கொண்டதாகக் கூறியது.
“நாட்டிற்கும் மக்களுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பின் உணர்வில், சிங்கப்பூர் அரசாங்கம் 5,000 சோதனை கருவிகளை (ஸ்கிரீனிங் கிட்) மலேசியாவுக்கு வழங்க முன்வந்துள்ளது, மலேசியாவும் அதனை ஏற்றுக்கொண்டது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஸ்கிரீனிங் கிட் சிங்கப்பூர் உயர் கமிஷினர் (Pesuruhjaya Tinggi Singapura) வானு கோபால மேனனால் புத்ராஜெயாவில் உள்ள சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபாவுக்கு இன்று வழங்கப்பட்டது.
இதற்கிடையில், ஸ்கிரீனிங் கிட்டுகள் சுங்கை புலோவில் உள்ள தேசிய பொது சுகாதார ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.