Prihatin: ‘No record’ என்ற தனிநபர்கள், புதிய விண்ணப்பங்களை செய்யலாம்

உள்நாட்டு வருவாய் வாரியம் (Inland Revenue Board (IRB)) அதிகாரப்பூர்வ இணைய முகப்பு (போர்ட்டல்) வழியாக பந்துவான் ப்ரிஹாத்தின் நேஷனல் (Bantuan Prihatin Nasional (BPN)) உதவியைச் சரிபார்க்கும்போது, ‘No record’ (பதிவு இல்லை) என்று குறியை பெற்ற நபர்கள், ஏப்ரல் 30 வரை ஆன்லைனில் புதிய விண்ணப்பங்களை செய்யலாம்.

அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், ‘new application’ (புதிய பதிவு) என்ற பகுதியை கிளிக் செய்து, விண்ணப்பத்தை உருவாக்க கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதுதான்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலம் ஏப்ரல் 14ஆம் தேதி முடிவடையும் வரை அனைத்து ஐ.ஆர்.பி வளாகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், நேரில் சென்று படிவத்தைப் பயன்படுத்தி விண்ணப்பங்கள் செய்ய இப்போது சாத்தியமில்லை, என்று ஐ.ஆர்.பி இன்று ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

தோல்வியுற்ற விண்ணப்பங்கள் குறித்த முறையீடுகளை அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ போர்டல் https://www.hasil.gov.my அல்லது https://bpn.hasil.gov.my மூலம் ஏப்ரல் 3 முதல் சமர்ப்பிக்கலாம்.

இருப்பினும், பி40 குழுவில் உள்ள பந்துவான் சாரா ஹிடுப் (Bantuan Sara Hidup (BSH)) உதவி பெறுநர்கள் மற்றும் ஐ.ஆர்.பி.-யில் வருமான வரி தரவுகளைக் கொண்ட எம்40 குழுவினர் BPN-க்கு பதிவு செய்யத் தேவையில்லை.

கடுமையான வலை போக்குவரத்து

BSH பெறுநர்கள் தானாகவே BPN-க்கு தகுதியுடையவர்கள். அதே நேரத்தில் எம்40 குழு, தங்களின் வருமானம் மற்றும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட பிற அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுவர்.

இணைய முகப்பபை (போர்ட்டலை) அணுக அதிக வலை போக்குவரத்து நெரிசல் இருப்பதால், உச்ச நேரம் இல்லாத நேரத்தில் பொதுமக்கள் தங்கள் நிலையை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

BPN விண்ணப்பம் இன்று திறக்கப்பட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

பிரதமர் முகிதீன் யாசின் சமீபத்தில் அறிவித்த ப்ரிஹாத்தின் ராக்யாட் பொருளாதார தூண்டுதல் தொகுப்பு (Prihatin Rakyat Economic Stimulus Package (Prihatin)) கீழ் எடுக்கப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக BPN உள்ளது.

மார்ச் 30 ஆம் தேதி மீண்டும் செயல்படத் தொடங்கிய ஹாசில் கேர் லைன் (Hasil Care Line (HCL)) கால் சென்டர், நடமாட்டக் காலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்குகிறது. வெளிநாட்டில் இருப்பவர்கள் 03-89111000 அல்லது + 603-89111000 என்ற எண்ணில் அணுகலாம்.

BSH தொடர்பான எந்தவொரு சந்தேகங்களுக்கும் 1800-88-2747 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு அழைக்கலாம்.