நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நீட்டிக்கப்படுமா என்பதை சுகாதார அமைச்சு தீர்மானிக்கும்.

நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு ஏப்ரல் 14 காலாவதியான பிறகு நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை.

மூத்த பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவை தொடரும் முடிவு சுகாதார அமைச்சினால் (MOH) மட்டுமே எடுக்கப்படும் என்றார்.

“இந்த இரண்டாவது நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவுவை நாம் தொடரலாமா இல்லையா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை, ஆனால் MOH அறிக்கையிலிருந்து நேர்மறை பாதிப்பு எண்ணிக்கை உயரவில்லை, சமமாகவே உள்ளது என்பதை காண முடிகிறது”.

“நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு நன்கு பின்பற்றப்பட்டால், பாதிப்பு குறைந்துவிடும் என்று நான் நம்புகிறேன்”.

“எனவே, நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவை தொடரலாமா இல்லையா என்ற முடிவு சுகாதார அமைச்சால் முடிவு செய்யப்படும்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.