சிலாங்கூரில் கோவிட்-19 தொற்று குறித்த சமீபத்திய புள்ளிவிவரங்கள் தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக குறைந்து வருகின்றன என்று டாக்டர் சுல்கிப்லி அகமட் கூறினார். இப்போது அம்மாநிலத்தில் பாதிப்பை தடுக்க பணிக்குழுவை வழிநடத்துகிறார் டாக்டர் சுல்கிப்லி அகமட்.
முன்னாள் சுகாதார அமைச்சரான டாக்டர் சுல்கிப்லி அகமட், சமீபத்திய பாதிப்புகள் மார்ச் 30 அன்று 60 பாதிப்புகளில் இருந்து மார்ச் 31 அன்று 32 பாதிப்புகளாக குறைந்துவிட்டன என்றார். அதே நேரத்தில் நேற்று (ஏப்ரல் 1) இரண்டு புதிய பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
இது ஏப்ரல் 1, 2020 நிலவரப்படி சிலாங்கூரில் மொத்த கோவிட்-19 நேர்மறை பாதிப்புகளின் எண்ணிக்கையை 726 ஆகக் கொண்டுள்ளது.
“நேர்மறை பாதிப்பில் மிக அதிகமான எண்ணிக்கையில் உள்ளதால், சிலாங்கூரில் கோவிட்-19 நோயின் தற்போதைய நிலைமையை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என STFC (Selangor Taskforce for Covid-19)/கோவிட்-19க்கான சிலாங்கூர் பணிக்குழு தெரிவித்துள்ளது.
“மலேசியா மக்கள் தொகையில் 20 சதவீதத்திற்கும் அதிகமான மக்களைக் கொண்டுள்ள சிலாங்கூரின் மக்கள் அடர்த்தியுடன் இந்த எண்ணிக்கை ஒத்துப்போகின்றன” என்று பணிக்குழு தலைவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்ட நான்கு மாவட்டங்களில் வசிக்கும் மக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், ஏப்ரல் 14 இறுதி வரை அமலில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளுக்கு இணங்கவும் அவர் நினைவுபடுத்தினார்.
அந்த நான்கு மாவட்டங்கள் – பெட்டாலிங், ஹ¥லு லங்காட், கிள்ளான் மற்றும் கோம்பக் ஆகும்.