காவலரை அவதூறாகப் பேசிய பெண் நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்லப்படுகிறார்

காவல்துறையினரை “இடியட்” (“You are idiots”) என்று அழைத்ததற்காகவும் அரசு ஊழியர்களின் பணியில் தலையிட்டது மற்றும் தகாத முறையில் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் ஒரு பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.

44 வயதான டோங் போ கிம் இன்று பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.

மார்ச் 31 ஆம் தேதி காலை 9.40 மணியளவில் கார்போரல் இசுவான் ஹசிம் நோ ஹம்சாவுக்கு எதிராக அவர் அக்குற்றங்களைப் புரிந்துள்ளார்.

தகாத முறையில் நடந்து கொண்டதற்கு, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 14ன் கீழ், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், RM100ஐ தாண்டாத அபராதம் விதிக்கப்படும்.

இரண்டாவது குற்றச்சாட்டுக்கு, அவர் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 186ன் கீழ் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது RM10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இரண்டு குற்றச்சாட்டுகளுக்கான மொத்த ஜாமீன் RM4,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

வழக்கு விசாரனை, மே 20க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.