கோவிட்-19 பாதிப்பு உலக அளவில் பத்து லட்சத்தை தாண்டியது

உலகம் | கோவிட்-19 : பெருத்தொற்று நோயான கோவிட்-19 தாக்கத்தால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டியுள்ளதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவிக்கிறது.

இப்போது உலகளவில் பத்து லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகளையும் 50,000க்கும் மேற்பட்ட இறப்புகளையும் எட்டியுள்ளது.

ராய்ட்டர்ஸ் தரவுகளின்படி, அமெரிக்காவின் பாதிப்பு மற்றும் ஸ்பெயினிலும் இத்தாலியிலும் இறந்தவர்களின் எண்ணிக்கைக்குப் பின்னர் இந்த எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தாலியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 13,900ஐத் தாண்டியுள்ளது, அதைத் தொடர்ந்து ஸ்பெயின்.

240,000 நோய்த்தொற்றுகளுடன் அதிக எண்ணிக்கையிலான உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளை பதிவு செய்துள்ளது அமெரிக்கா.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் சீனாவில் முதன்முறையாக பதிவுசெய்யப்பட்டதிலிருந்து, இந்த பாதிப்பு உலகம் முழுவதும் பரவியுள்ளது; வணிக வளாகங்களை மூடுமாறு தங்கள் அரசாங்கங்களைத் தூண்டியது; விமானங்களின் சேவைகள் முடக்கப்பட்டன; பரவலைக் கட்டுப்படுத்த மில்லியன் கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியேறாதவாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.