நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு அமல்படுத்தப்படும் வரை அனைத்து ரமலான் பஜார்களும் செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை என்று மூத்த பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு நிறுத்தப்பட்டால், தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்த விஷயத்தை தீர்மானிக்க ஒரு நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) வழங்கும் என்று அவர் கூறினார்.
“நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (இரண்டாம் கட்டம்) தொடரும் வரை அல்லது மற்றொரு “நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு இருந்தால், ரமலான் சந்தை அனுமதிக்கப்படாது” என்று அவர் இன்று கூறினார்.