கோவிட்-19: 217 புதிய பாதிப்புகள், 3 இறப்புகள், 60 பேர் உடல் நலமடைந்தனர்

கோவிட்-19 நோய்த்தொற்று தொடர்பான மேலும் மூன்று இறப்புகளை மலேசியா பதிவு செய்துள்ளது. இதனால், மலேசியாவில் மொத்தமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 53-ஆக உள்ளது.

இன்று பிற்பகல் நிலவரப்படி புதிய பாதிப்புகள் 217-ஆக பதிவாகியுள்ளன. இதுவரை மொத்தம் 3,333 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று, 60 நோயாளிகள் குணமடைந்து மீட்கப்பட்டு மருத்துவமனையிலிருந்து வெளியேற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். மொத்தமாக குணப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 827 பேர் ஆவர் என்று கூறியுள்ளார்.

நூர் ஹிஷாமின் கூற்றுப்படி, இன்று அறிவிக்கப்பட்ட 217 புதிய பாதிப்புகளில், 58 பாதிப்புகள் ஸ்ரீ பெட்டாலிங் தப்லீக் கூட்டத்துடன் தொடர்புடையவை.

மேலும், கோவிட்-19 மருத்துவமனைகளில் ஒன்றான துவாங்கு முஹ்ரிஸ் யு.கே.எம். மருத்துவமனையில் (Hospital Canselor Tuanku Muhriz UKM) 44 பாதிப்புகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 41 பாதிப்புகள் சிலாங்கூரில் உள்ள தஃபிஸ் மதரஸா (madrasah tahfiz) தொடர்பாவை ஆகும்.

இன்றுவரை, தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) 108 நேர்மறை பாதிப்புகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவற்றில் 54 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறாது.

சமீபத்திய மூன்று மரணங்களின் விபரங்கள் இங்கே:

51வது மரணம் (‘நோயாளி 2561’) 84 வயதான மலேசிய நபர், இதய நோய் வரலாறு கொண்டவர். அவர் மார்ச் 12, 2020 அன்று சுங்கை புலோ மருத்துவமனையிலும் பின்னர் தேசிய இதய நிறுவனத்திலும் சிகிச்சை பெற்றார். அவர் ஏப்ரல் 2, 2020 அன்று இரவு 1.07 மணிக்கு இறந்துள்ளார்.

52வது மரணம் (‘நோயாளி 2122’) 52 வயதான மலேசிய நபர். அவர் மார்ச் 18, 2020 அன்று நெகிரி செம்பிலன், துவாங்கு ஜாபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மேலும் ஏப்ரல் 3, 2020 அன்று காலை 7.55 மணிக்கு இறந்துள்ளார்.

53வது மரணம் (‘நோயாளி 2034’) நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் சிறுநீரக நோய் ஆகியவற்றின் பின்னணியைக் கொண்ட 73 வயதான மலேசிய நபர். அவர் மார்ச் 24, 2020 அன்று பேராக் பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், 2020 ஏப்ரல் 3 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு இறந்துள்ளார்.