கோவிட்-19: 40,000 பேர் நோய்தொற்று சங்கிலியில் உள்ளதாக சுகாதர அமைச்சின் தரவு குறிக்கிறது

தப்லீக் உறுப்பினர்கள் உட்பட சுமார் 40,000 நபர்கள் கொண்ட கோவிட்-19 பரவலின் தரவுகளை சுகாதார அமைச்சிடமிருந்து பெற்றுள்ளது மலேசிய காவல்துறை (PDRM).

பெரும்பாலான பாதிப்பு சம்பவத்தில் ஈடுபடக்கூடியவர்களை அடையாளம் காண அந்த தரவுகள் செய்யப்பட்டதாக காவல்துறைத் தலைவர் அப்துல் ஹமீத் படோர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் தரவுகளின் அடிப்படையில், கோவிட்-19 சோதனையை மேற்கொள்ள தனிநபர்கள் மற்றும் குழுக்கள் முன்வர வேண்டிய பல பகுதிகளை அவர் அடையாளம் கண்டுள்ளார் என்றார்.

அண்மையில், ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடந்த விழாவில் கலந்து கொண்ட 11,000 தப்லீக் உறுப்பினர்களை அடையாளம் காண சுகாதார அமைச்சுக்கு உதவ நாங்கள் தரவை பகுப்பாய்வு செய்தோம்.

“இந்தத் தரவிலிருந்து, நெருங்கிய தொடர்புகள், பயணம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களால் பாதிக்கப்படக்கூடியவர்கள் ஆகியோரின் வலையமைப்பை அடையாளம் காண பயன்படுத்தப்பட்டது” என்று கோலாலம்பூரின் புக்கிட் அமானில் கூறினார்.

கோவிட்-19 சோதனையை மேற்கொள்ள வீட்டு முகவரி, தொலைபேசி எண் மற்றும் அடையாள அட்டை போன்ற முழுமையான தகவல்கள் பெறுவது உட்பட தனிநபர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

பெரும்பாலான தப்லீக் உறுப்பினர்கள் சோதனையிடப்பட்டதாகவும், தப்லீக் உறுப்பினர்கள் மீது கோபப்பட்டு விமர்சிக்க வேண்டாம் எனவும் போலிசார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், அப்துல் ஹமீத் வெளிநாட்டிலுள்ள தப்லீக் உறுப்பினர்கள் பற்றிய தகவல்களைத் தேடுவதாகவும் கூறியுள்ளார். அவற்றைப் பின்னர் விமான நிலையம், துறைமுகத்தில் உள்ள குடிவரவுத் துறைக்கு வழங்ப்போவதாகவும் கூறினார்.

“இது தப்லீக் உறுப்பினர்கள் குழு நாட்டை அடைந்து விட்டனர் என்பதையும், காவல்துறையினர் அவர்களை 14 நாள் தனிமைப்படுத்தலுக்காக பிரத்யேக மையங்களுக்கு அழைத்துச் செல்வார்கள் என்பதையும் இது உறுதிப்படுத்தும்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, மஸ்ஜித் ஜமேக் ஸ்ரீ பெட்டாலிங்கில் தப்லீக் பேரணியில் பங்கேற்ற ஏறத்தாழ 11,000 பேரில் 95 சதவீதம் கோவிட்-19 சுகாதார பரிசோதனையை மேற்கொண்டுவிட்டதாக தப்லீக் இஜ்திமாக்கின் அமைப்பாளர்கள் கூறினர்.

இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 28 முதல் மார்ச் 1 வரை பேரணியில் கலந்து கொண்டவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் அனைத்து மட்டங்களிலும் உள்ள அதிகாரிகள் மற்றும் ஜே.எஸ்.ஜே உறுப்பினர்கள் மற்றும் மாநில காவல்துறையினரை உள்ளடக்கிய ஒரு பணிக்குழுவை அமைத்தனர். தப்லீக் கூட்ட பங்கேற்பாளர்கள் இப்போது நாட்டின் மிகப்பெரிய கோவிட்-19 நோய் தொற்றின் காரணமாக உள்ளனர்.