கோவிட்-19இன் பரவல் மற்றும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை செயல்பாடும் தேசிய உயிரியல் பூங்காவை பாதித்துள்ளது. குறிப்பாக அப்பூங்காவிற்கான உணவுப் பொருட்கள் வழங்கல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் தேசிய மிருகக்காட்சிசாலையின் விலங்குகளின் உணவை பெற, அதன் டிக்கெட் விற்பனை, இட வாடகை, நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப் மற்றும் பொது மக்களின் நன்கொடைகளை நம்பியிருந்தது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை செயல்படுத்தப்பட்ட பின்னர் இது வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
பூங்காவின் விலங்கியல் அதிகாரி வான் நூர் ஹயாதி வான் ஆப் அஜீஸ், விலங்குகளுக்கு உணவு, இறைச்சி, காய்கறிகள் மற்றும் பழங்களை நன்கொடையாக வழங்குமாறு மக்களை கேட்டுள்ளார்.
“தாவர உண்ணி மற்றும் மாமிச உண்ணி விலங்குகளின் தீவனத்திற்கு வேண்டிய முக்கிய உணவுகள் – இறைச்சி, காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவைக்கு அதிக தேவை உள்ளது. இந்த நேரத்தில் வெளி நன்கொடைகளை நாங்கள் வரவேற்கிறோம்,” என்றார்.
மூலப்பொருட்களின் நன்கொடைகளை விநியோகிக்க அல்லது பண நன்கொடைகளையும் வழங்க விரும்பும் பொது உறுப்பினர்கள் அல்லது தனி நபர்கள் [email protected] இணைப்பு வழியாக மின்னஞ்சல் செய்யலாம்.
முன்னதாக, தேசிய மிருகக்காட்சிசாலை டெஸ்கோ மலேசியா மற்றும் மாருகி ராமன் உணவகத்திலிருந்து கோழி, மீன் மற்றும் கோழி கல்லீரல் போன்ற மூலப்பொருட்களின் நன்கொடைகள் கிடைத்தன.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலம் முழுவதும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த இரு நிறுவனங்களிடமிருந்தும் மூலப்பொருட்களை நன்கொடையாக அனுப்ப உதவுவதாக Kembara Kitchen நிறுவனர் யிலின் சான் கூறினார்.