கோவிட்-19: 26 சதவீத நோயாளிகள் குணப்படுத்தப்பட்டனர், 150 புதிய பாதிப்புகள், 4 இறப்புகள்

கோவிட்-19: இன்று நண்பகல் நிலவரப்படி 150 புதிய பாதிப்புகள் உள்ளன. இப்போது மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3,483-ஆக உள்ளது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இன்று நான்கு புதிய இறப்புகளும் நிகழ்ந்துள்ளன. இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 57-ஆக உயர்ந்துள்ளது.

புதிய பாதிப்புகளில், 80 பாதிப்புகள் பிப்ரவரி பிற்பகுதியில் ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடந்த தப்லீக் கூட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ பெட்டாலிங் கூட்ட பாதிப்பு மலேசியாவில் மிகப்பெரியது என அறியப்பட்டதே. இதனால் மொத்தம் 1,545 பாதிப்புகள் உள்ளன. மொத்த பாதிப்புகளில் 44.63 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

தற்போதைய கோவிட்-19 நோயாளிகளில், 99 பேர் தற்போது ஐ.சி.யுவில் உள்ளனர்; நேற்றையதை விட இன்று, ஒன்பது குறைவாக உள்ளனர்.

99 நோயாளிகளில் 50 பேர் வென்டிலேட்டர்களில் உள்ளனர்; நேற்றை விட இன்று நான்கு குறைவானவர்கள்.

இன்று 88 பேர் குணமடைந்துள்ளனர் என்ற செய்தி ஊக்கமாக உள்ளது. இன்றுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 915 ஆகும்.

நான்கு புதிய இறப்புகளின் விவரம் பின்வருமாறு:

‘நோயாளி 2,149’ (இறப்பு 54)
இதய நோய்களின் வரலாறு கொண்ட 85 வயதான மலேசிய பெண். அவர் மார்ச் 23 அன்று தேசிய இதய மையத்தில் சிகிச்சை பெற்று மார்ச் 28 அன்று இறந்தார்.

‘நோயாளி 860’ (இறப்பு 55)
உயர் இரத்த அழுத்த வரலாற்றைக் கொண்ட 66 வயதான மலேசிய பெண். அவர் மார்ச் 18 அன்று கிளந்தானின் சுல்தான் இஸ்மாயில் பெட்ரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் நேற்று மாலை 4 மணிக்கு இறந்தார்.

நோயாளி 2,850 (இறப்பு 56)
இதய நோயின் வரலாறு கொண்ட 56 வயதான மலேசிய நபர். அவர் ‘நோயாளி 1,031’ உடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். மார்ச் 30 அன்று சரவாக் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நேற்று மாலை 4.16 மணிக்கு அவர் இறந்தார்.

நோயாளி 1,575 (இறப்பு 57)
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 61 வயதான மலேசிய நபர். மார்ச் 23 அன்று தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நேற்று இரவு 10.25 மணிக்கு அவர் இறந்தார்.