உண்மையாக இருங்கள்! பாதிக்கப்பட்டு வெளிநாட்டிலிருந்து திரும்பியவர் ஐந்து மரணங்களுக்கு காரணமானார்.
கொரோனா வைரஸ் | நோயாளிகள் தங்களது நெருங்கிய தொடர்புகள் மற்றும் பயண வரலாறு குறித்து உண்மையாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் இன்று வலியுறுத்தினார்.
அவர் இத்தாலியில் இருந்து திரும்பிய ஒரு நோயாளியின் உதாரணத்தைக் கொடுத்தார். அந்நோயாளி, சரவாக்கில் கோவிட்-19 நோய்த்தொற்றுகளைப் பரவ செய்து, ஐந்து இறப்புகளுக்கும் காரணமாயிருந்துள்ளார்.
“வெளிநாட்டு பயணங்களின் வரலாறு, அல்லது கோவிட்-19 நோயாளியுடன் நெருக்கமாக தொடர்பு, கோவிட்-19 பரவல் தொடர்புடைய கூட்டங்களில் கலந்து கொண்டிருத்தல் போன்ற உண்மையாக தகவல்களை மக்கள் வழங்குவதற்கான முக்கியத்துவத்தை சுகாதார அமைச்சகம் வலியுறுத்த விரும்புகிறது”.
“எனவே, கோவிட்-19 பாதிப்புகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவதற்கும், பாதிப்புகள் ஏற்படுவதற்குமான உண்மையான ஆபத்து உள்ளது.
“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு ஏற்ப, வெளிநாட்டிலிருந்து திரும்பும் மலேசியர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் வைக்கப்படுவார்கள்.
“அவர்கள் காய்ச்சல் மற்றும் கோவிட்-19 அறிகுறிகளுக்காக நுழைவு புள்ளிகளில் சோதனையிடப்படுவார்கள். மேலும் அவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் கண்காணிக்கப்படுவார்கள்,” என்று அவர் கூறினார்.
அறிகுறிகளைக் காண்பிக்கும் எந்தவொரு நோயாளிகளும், வருகையின் போதோ அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களிலோ இருந்தாலும், உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள் என்று அவர் கூறினார்.