மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் கீழ் வைக்க இன்னும் சில பகுதிகள்

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளை கடுமையாக்குவதற்காக தற்போது சிவப்பு மண்டலத்தில் உள்ள பல பகுதிகளை அரசாங்கம் கண்காணித்து வருகிறது.

லெம்பா பந்தாய் உட்பட பல இடங்களில் கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்து வருவதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து மலேசிய சுகாதார அமைச்சு தற்போது சம்பந்தப்பட்ட பகுதிகள் குறித்து மேலும் விரிவாக ஆராய்ந்து வருவதாக பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

“இந்த நேரத்தில் நாம் அதிக கவனமாக உள்ளதால், சுகாதார அமைச்சு இன்னும் விரிவாக மதிப்பிடுகிறது”.

சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, 18 சிவப்பு மண்டலங்களின் பட்டியலில் லெம்பா பந்தாய் முதலிடத்தில் உள்ளது. நேற்று மதியம் நிலவரப்படி இன்றுவரை இங்கு 376 பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

கோவிட்-19 பாதிப்புகளின் மலேசியாவில் அதிகமான எண்ணிக்கையை, லெம்பா பந்தாய் ஏப்ரல் 3 ஆம் தேதி 322 பாதிப்புகளையும், ஏப்ரல் 4 ஆம் தேதி 367 பாதிப்புகளையும் பதிவாகியுள்ளது.

மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் கீழ் தற்போது மூன்று இடங்கள் உள்ளன. அதாவது குளுவாங் சிம்பாங் ரெங்காமில் இரண்டு கிராமங்கள், சிலாங்கூர் ஹுலு லங்காட்டில் ஏழு கிராமங்கள் மற்றும் கோலாலம்பூரில் உள்ள மெனாரா சிட்டி ஒன் ஆகியவை அடங்கும்.