நடமாட்டக் கட்டுப்பாட்டின் போது ஹெய்னெக்கென் மதுபான ஆலை செயல்பட அளித்த ஒப்புதலை அரசாங்கம் ரத்து செய்தது

பிரதமர் முகிதீன் யாசின் தலைமையில் இன்று நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டம், நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை காலத்தில் இரண்டு மது ஆலைகள் செயல்படுவதற்கான ஒப்புதலை ரத்து செய்ய முடிவு செய்தது.

இதற்கிடையில், இந்த விஷயத்தை உறுதிப்படுத்திய மூத்த பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், இன்று பிரதமர் முகிதீன் யாசின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

“வழங்கப்பட்ட ஒப்புதல் ரத்து செய்யப்படுவதாக நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்று அவர் கூறினார்.

புத்ராஜெயாவில் இன்று நடமாட்டக் கட்டுப்பாடு தொடர்பான அமைச்சர்கள் சிறப்புக் குழு கூட்டத்தின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

அனைத்துலக வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சு (Miti) உடனடியாக ரத்து கடிதத்தை வெளியிடும் என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.

“… எனவே ஹெய்னெக்கென் மற்றும் கார்ல்ஸ்பெர்க் தொழிற்சாலைகள் இயங்கும் என்ற பிரச்சினையும் இனி இருக்காது,” என்று அவர் கூறினார்.