கோவிட்-19: 131 புதிய நோய்த்தொற்றுகள், 236 பேர் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் | மலேசியாவில் இன்று 131 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இன்றுவரை மொத்தம் 3,793 பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

அவர் இன்று ஒரு புதிய மரணத்தையும் அறிவித்தார். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 62 அல்லது 1.63 சதவீதமாக உள்ளது.

நூர் ஹிஷாம் இன்று அதிகமானோர் குணமடைந்து இருப்பதாக அறிவித்தார். 236 கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இது மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 1,241 பேர் அல்லது 32.72 சதவிகிதம் என்று பதிவு செய்துள்ளது.