கோவிட்-19 விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகளைப் பாதித்ததாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா சுகாதாரத்தை பராமரிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
“செல்லப்பிராணிகளைப் பொறுத்தவரை, பெரும்பாலோர் அதனை அவர்களின் குடும்பத்தின் ஒரு பகுதியாகக் கருதுகின்றனர்”.
“செல்லப்பிராணிகளிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் நாம் விலகி இருக்க முடியாவிட்டால், விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகளுடன் தொடர்பு கொள்ளும்போதும் மர்றும் எல்லா நேரங்களிலும் நம்மை தூய்மையாக வைத்திருப்பது முக்கியம்”.
“விலங்கைக் கையாளுவதற்கு முன்னும் பின்னும் கைகளைக் கழுவுங்கள்”.
“இதற்கிடையில், இது குறித்த விரிவான ஆலோசனைகளுக்காக சுகாதார அமைச்சகம் கால்நடை சேவைகள் துறையுடன் (Jabatan Perkhidmatan Veterinar (DVS)) நெருக்கமாக செயல்படும்” என்று அவர் மேலும் கூறினார்.
ஒரு பேஸ்புக் பதிவில், பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பது குறித்து உலக சுகாதார அமைப்பின் கிராஃபிக் தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். இதில் விலங்குகள் அல்லது விலங்குகளின் கழிவுகளை கையாண்ட பிறகு கை கழுவ வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இன்று முன்னதாக, நியூயார்க்கின் பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் நான்கு வயதுடைய நடியா எனும் பெண் மாலாயன் புலி, கோவிட்-19 பாதிப்புக்கு சாதகமாக பரிசோதிக்கப்பட்டது. இது, அமெரிக்காவில் விலங்கிடமிருந்து மனிதனுக்கு தொற்று ஏற்பட்ட முதல் வழக்காகும் என சர்வதேச ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டன.
நடியா மற்றும் அதன் சகோதரி அசுல், இரண்டு அமுர் புலிகள் மற்றும் மூன்று ஆப்பிரிக்க சிங்கங்கள் வறட்டு இருமலின் அறிகுறிகளைக் காண்பித்தன. பின் அந்த புலிக்கு கோவிட்-19 கிருமி மிருகக்காட்சிசாலையின் பராமரிப்பாளரால் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
ஹாங்காங் மற்றும் பெல்ஜியத்தில் பூனைகள் மற்றும் நாய்கள் மூலமும் கோவிட்-19 நேர்மறை பாதிப்புகள் பற்றிய தகவல்களும் வந்துள்ளன.