கிட்டத்தட்ட அனைத்து மலிண்டோ ஏர் ஊழியர்களுக்கும் ஊதியம் இல்லை

கோவிட்-19 பாதிப்பைத் தொடர்ந்து ஏப்ரல் முதல் அதன் ஊழியர்கள் ஊதியம் பெறாத விடுப்பு எடுக்க வேண்டும் என்று மலிண்டோ ஏர் முடிவு செய்துள்ளது.

மலிண்டோ ஏர் தலைமை நிர்வாக அதிகாரி முஷாபிஸ் முஸ்தபா பக்ரி, தனது ஊழியர்களில் குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே வேலைக்கு வர வேண்டும் என்றும் அவர்களுக்கு தினசரி சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

இந்த விடயம் விமானத்தின் மெமோ மூலம் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிகிறது.

“இதனால், நான் ஊதியம் இல்லாத விடுமுறையில் இருக்கிறேன்” என்று ஒரு மூத்த மலிண்டோ அதிகாரி கூறினார். அவர் ஊடகங்களுடன் பேச அதிகாரம் இல்லாததால் பெயர் குறிப்பிட மறுத்துவிட்டார்.

ராஜினாமா செய்ய விரும்புவோரை அனுமதிக்க, பணிநீக்கம் குறித்த அறிவிப்பையும் நிறுவனம் ஒத்தி வைத்துள்ளது.

ஊதியம் பெற உதவுவதற்காக அந்நிறுவனம் நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், சில நேர்மறையான முடிவுகளை எதிர்பார்ப்பதாகவும் முஷாபிஸ், மலிண்டோவின் ஊழியர்களுக்கு தெரிவித்தார்.

மார்ச் மாத தொடக்கத்தில், மலிண்டோ, தனது ஊழியர்களுக்கு 50 சதவீத ஊதியக் குறைப்பு மற்றும் இரண்டு வார ஊதியம் இல்லாத விடுப்பு எடுக்க உத்தரவிட்டது.

மலிண்டோவின் பெரும்பான்மையான பங்குதாரர் இந்தோனேசியாவில் உள்ள லயன் குழுமம் (Lion Group) ஆகும்.

அதன் போட்டியாளர்களான ஏர் ஏசியாவைப் போலல்லாமல், 2018 ஆம் நிதியாண்டில், மலிண்டோ ஏர் 2013ஆம் ஆண்டு துவங்கியதிலிருந்து லாபத்தை ஈட்ட முடியவில்லை.

இதனிடையே, ஏர் ஏசியா உரிமையாளர் டோனி பெர்னாண்டஸ், 2020க்கு நிறுவனத்திற்கு போதுமான பணம் இருந்தாலும், அது மத்திய அரசிடமிருந்து கடன்களை எதிர்பார்க்கிறது என்று தெரிவித்துள்ளார்.