பெர்சத்து தலைவர் பதவிக்கான போட்டியில் முகிதீன் யாசினுக்கும் முக்ரிஸ் மகாதீருக்கும் இடையிலான போட்டி நிழவுகிறது.
பெர்சத்துவின் தேர்தலுக்கு தகுதியான வேட்பாளர்களின் பட்டியலின் படி இது தெரிகிறது.
போட்டியிடவிருந்த முகமட் பைஸ் அஸ்லீ ஷாமினின் பெயர், வேட்புமனு மூடப்பட்டபோது பட்டியலில் இடம் பெறவில்லை.
பெர்சத்துவின் துணைத் தலைவர் பதவிக்கு முன்னாள் பொதுச்செயலாளர் மர்சுகி யஹாயாவுக்கும் பேராக் மந்திரி புசார் அகமது பைசல் அஸுமுவுக்கும் இடையே போட்டி நடபெறுகிறது.
ஆரம்பத்தில் போட்டியிடயிருந்த அனாஸ் ஆகாஷா நஸ்ரியின் பெயரும் வேட்பாளராக பட்டியலிடப்படவில்லை.
முகமட் பைஸ் மற்றும் அனாஸ் ஆகாஷா இருவரின் பெயர்களும் ஏன் வேட்பாளர்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன என்பது உறுதியாகத் தெரியவில்லை.
கட்சி தலைமைத் தேர்தல் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நடைபெறும். ஆனால், அதன் தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.
பெர்சத்து சிறப்புத் தலைவர் டாக்டர் மகாதீர் முகமது ஏற்கனவே எந்த போட்டியும் இன்றி தனது நிலையை தக்க வைத்துக் கொண்டார்.
இதற்கிடையில், 20 முதன்மை கட்சி கவுன்சில் பதவிகளுக்கு 164 நபர்கள் போட்டியிடுவார்கள்.
அவர்களில், பொருளாதார விவகார அமைச்சர் முஸ்தபா முகமட், சிம்பாங் ரெங்கம் எம்.பி. மற்றும் முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக், ரைஸ் யாத்திம், மற்றும் பலர் அடங்குவர்.
இதற்கிடையில், பெர்சத்து இளைஞர் பிரிவு முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் சையத் சதிக் சையத் அப்துல் ரஹ்மான் சம்பந்தப்பட்ட மும்முனை போட்டியைக் காணும். அவர், வான் அகமட் பாய்சல் வான் அகமட் கமால் மற்றும் முகமட் முசம்மில் இஸ்மாயில் ஆகியோரால் சவால் செய்யப்படுவார்.
வான் அகமட் பாய்சல் வான் அகமட் கமால் மற்றும் முகமட் முசம்மில் இஸ்மாயில் இருவரும் அர்மாடா எக்ஸ்கோ உறுப்பினர்கள் ஆவர்.
இதற்கிடையில், பெர்சத்து மகளிர் தலைவர் ரினா ஹாருன், அஸ்லினா மெஹ்தாப் முகமட் இஷாக், இஸ்ஸா இஸ்மாயில் மற்றும் ஜுஹுரைனா மக்மோர் ஆகிய மூன்று சவால்களை எதிர்கொள்கிறார்.