ஜாக்ரி கிர், இன்று சமூக பாதுகாப்பு அமைப்பின் (Pertubuhan Keselamatan Sosial (Perkeso) தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
அவருக்கு பதிலாக சபாக் பெர்னம் எம்.பி. முகமட் பாசியா முகமட் பாக்கே நியமிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளது. அவர் பெர்சத்து கட்சி உறுப்பினர் ஆவார்.
தனது ராஜினாமாவை உறுதிப்படுத்தும் ஒரு தனி அறிக்கையில், ஜக்ரி தனது ராஜினாமா கடிதத்தை மனிதவள அமைச்சர் எம். சரவணனிடம் இன்று சமர்ப்பித்ததாக கூறினார்.
அவரின் ராஜினாமா உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
அலையன்ஸ் மலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் ஜக்ரி, அக்டோபர் 8, 2018 அன்று பெர்கேசுவுக்கு தலைமை தாங்க பக்காத்தான் ஹராப்பான் அரசு ஆலோசனைக் குழுவால் நியமிக்கப்பட்டார்.
அவர் காப்பீட்டுத் துறையில் 30 வருட அனுபவம் பெற்றவர்.
“இது நாட்டிற்கான ஒரு சேவையாக நான் பார்க்கிறேன், ஆனால் அரசாங்கத்தின் மாற்றத்துடன், நிச்சயமாக ஒரு புதுமுகம் வரும், மேலும் எனது சேவைகள் இனி தேவையில்லை என்று நினைக்கிறேன்”.
“நான் என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன். கடந்த 16 மாதங்களாக அரசாங்கத்திற்கு சேவை செய்வதற்கான அனைத்து ஆதரவிற்கும் சலுகைக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.
முந்தைய ஆட்சியால், ஜாக்ரி, மாரா கவுன்சில் உறுப்பினராகவும், மேபேங்க் சொத்து மேலாண்மை குழுத் தலைவர் ஹஸ்னிதா ஹாஷிம் மாராவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.
இருப்பினும், ஹஸ்னிதா, ஜாக்ரி மற்றும் பிற மாரா கவுன்சிலர்கள் கடந்த மாதம் முகிதீன் யாசின் தலைமையிலான புதிய தேசிய கூட்டணியால் நீக்கப்பட்டனர்.
மாரா கவுன்சிலின் மற்ற உறுப்பினர்கள், ஜமேலா ஜமாலுதீன், தெங்கு டான் ஸ்ரீ மஹலீல் தெங்கு ஆரிஃப், நுங்சாரி அஹ்மத் ராதி, அமீர் அலி மைடின், சையத் தமீம் அன்சாரி சையத் முகமது, மற்றும் அஹ்மத் பாஸ்லான் சே காசிம் ஆகியோரும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், பேங்க் ரக்யாத், சனிக்கிழமையன்று அதன் தலைவரான நோரிபா கம்சோவின் சேவையை நிறுத்தியது.
1MDB/1எம்.டி.பி உலகளாவிய ஊழலை எதிர்த்து குரல் கொடுத்த ஒரு முக்கிய நபராக அறியப்பட்ட பக்கே முகமட் சால்லே, மலேசிய பாமாயில் வாரியத்தின் (MPOB) தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் என்று சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.