இந்த ஆண்டு UPSR மற்றும் PT3 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன

இந்த ஆண்டு ஆரம்ப பள்ளி மதிப்பீட்டு சோதனை (யு.பி.எஸ்.ஆர்.) மற்றும் படிவம் 3 மதிப்பீடு (பிடி3) ஆகிய அரசாங்கத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவைத் தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டு, கல்வி அமர்வு நிறுத்தப்பட்டதன் காரணமான இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் முகமட் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த ஆண்டின் ஆறாம் வகுப்பு மற்றும் மூன்றாம் படிவ மாணவர்களை மதிப்பிடுவதற்கு ஒரு புதிய வழிமுறை அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

மற்ற அனைத்து இடைநிலைப் பள்ளி தேர்வுகளும் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

மலேசியாவின் கல்விச் சான்றிதழ் (எஸ்.பி.எம்)/Sijil Pelajaran Malaysia (SPM), மலேசியாவின் தொழில் சான்றிதழ் (எஸ்.வி.எம்)/Sijil Vokasional Malaysia (SVM) மற்றும் மலேசியாவின் மத விவகார சான்றிதழ் (ஸ்டாம்)/Sijil Tinggi Agama Malaysia (STAM) ஆகியவை 2021 முதல் காலாண்டிற்கு ஒத்திவைக்கப்படும் என்று அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், (Sijil Tinggi Persekolahan Malaysia (STPM) எஸ்.டி.பி.எம் மாணவர்களுக்கு, அவர்களின் இரண்டாம் தவணை தேர்வு 2020 ஆகஸ்டுக்கும், மூன்றாம் தவணை தேர்வு 2021 முதல் காலாண்டிற்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.