மலேசியாவில் இன்று 85 புதிய கோவிட்-19 பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இது மார்ச் 14 முதல் இதுவரை, ஒரு நாளில் பதிவான மிகக் குறைந்த பாதிப்புகள் ஆகும்.
இது மொத்த கோவிட்-19 பாதிப்புகளை 5,072-ஆகக் கொண்டு வருவதாக சுகாதார அமைச்சு இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
மார்ச் 15-இல் இருந்து, தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை 100க்கும் அதிகமாகவே இருந்துள்ளது. மார்ச் 14 அன்று சுகாதார அமைச்சு 35 பாதிப்புகளை பதிவாக்கியது.
நூர் ஹிஷாம் ஒரு புதிய மரணத்தையும் அறிவித்தார். இதனால் மொத்த இறப்புகளின் ண்ணிக்கை 83 ஆக இருக்கிறது.
169 பேர் குணமடைந்துள்ளனர் என்பது மனநிறைவளிக்கிறது. இதனால் மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 2,647 பேருக்கு கொண்டு வந்துள்ளது.