அமைச்சரின் சிறப்பு அதிகாரி பதவியை நிராகரித்தார் விரிவுரையாளர்

யுனிவர்சிட்டி உத்தாரா மலேசியாவின் விரிவுரையாளர் கமருல் ஜமான் யூசோப், மூலத் தொழில் அமைச்சர் கைருதீன் அமன் ரசாலியின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவதை ஏற்க மறுத்துள்ளார்.

அமைச்சின் கோப்பகத்தில் ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ள அவரது பெயர் குறித்து கேட்டதற்கு, கமருல் ஜமான் இது தவறான பதிவு என்று விவரித்தார்.

“தவறு ஏற்பட்டுள்ளது. நான் இன்னும் எந்த சலுகையையும் ஏற்கவில்லை. இது ஒரு பிரச்சினையாக எழுந்துள்ளதால், நான் இன்று சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு முறையான மறுப்பு கடிதம் ஒன்றை எழுதுவேன்”.

“நாட்டின் அரசியல் வளர்ச்சி குறித்து சுயாதீனமான கருத்துக்களை தெரிவிக்கும் எனது உரிமையை விட்டுக்கொடுத்து இணங்கும் நியமனங்களை நான் ஏற்க மாட்டேன்” என்று மலேசியாகினியிடம் கூறினார்.

அரசியல் அறிவியல் கல்வியாளராக இருக்கும் அவர், தனது பணியை மாற்ற எந்த திட்டமும் இல்லை என்றார்.

மலேசியாகினி பார்த்த அக்கடிதத்தின்படி, கைருதீன் மார்ச் 10 அன்று இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார். நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக மார்ச் 17 அன்று தனக்கு இந்த கடிதம் கிடைத்ததாக கமருல் ஜமான் கூறினார்.
அந்த நேரத்தில் உடனடியாக பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று தான் உணர்ந்ததாக கூறினார்.

கமருல் ஜமான் PHஐ நிறைய விமர்சித்துள்ளார். அதோடு, பாஸ் ஹராக்காடெய்லி அதிகாரப்பூர்வ வலை செய்தித்தாள் பக்கத்தில் நிறைய எழுதியுமுள்ளார்.