கோவிட்-19: 53.4% குணமடைந்துள்ளனர், 110 புதிய பாதிப்புகள், 1 இறப்பு

மலேசியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து மீண்டு வரும் நோயாளிகள் 53.4 சதவீதம் உள்ளனர்.

இன்று செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இன்று குணமடைந்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 119 எனவும், இதுவரை நாட்டில் மொத்தம் 2,766 நோயாளிகள் குணமடைந்துள்ளார்கள் என்று தெரிவித்தார்.

இன்று மொத்தம் 110 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இவர்களில், 56 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) இருக்கின்றனர். அவர்களில் 29 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.

மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 5,182 ஆகும். குணமடைந்த நோயாளிகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், தற்போது மருத்துவமனையில் உள்ள பாதிப்புகள் 2,332 மட்டுமே என்றார்.

இன்று பிற்பகல் வரை மற்றொரு இறப்பும் பதிவாகியுள்ளது. மலேசியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆகும்.

84-வது இறப்பு, 66 வயதான மலேசிய நபர். இவர், இருதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்த நோய் வரலாற்றைக் கொண்டிருந்தார். நோயாளி, ஏப்ரல் 9 ஆம் தேதி கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஏப்ரல் 15 அன்று மதியம் 12.55 மணிக்கு இறந்துவிட்டார் என தெரிகிறது.