எல்.ஆர்.டி மற்றும் எம்.ஆர்.டி நிலையங்களில் கூடல் இடைவெளியை கட்டுப்படுத்த, அமலாக்கப் பணியாளர்களை பணியில் அமர்த்த, மலேசிய காவல்துறையுடன் கலந்துரையாடுவார் என்றார் பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப்.
பல பொது போக்குவரத்து நிலையங்களில் ஏற்படும் நெரிசல் குறித்து தான் அறிவதாக அவர் கூறினார்.
“எல்.ஆர்.டி மற்றும் எம்.ஆர்.டி நிலையங்களில் கூடல் இடைவெளி பிரச்சினை இருந்தால் நான் பி.டி.ஆர்.எம் உடன் பேசி, அங்கு போலிஸ் அல்லது பிற அமலாக்க பணியாளர்களை பணியில் அமர்த்த முடியும்,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் தினசரி ஊடக மாநாட்டில் செய்தியாளர்களிடம் கூறினார்.
எவ்வாறாயினும், எல்.ஆர்.டி மற்றும் எம்.ஆர்.டி பயனர்கள் தங்கள் சொந்த பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை பராமரிக்க கூடல் இடைவெளிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், அவர்கள் ஒழுக்கமாகவும் பொறுப்பாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.