இன்றுவரை, அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சு (MITI) நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்ட நான்கு நிறுவனங்களுக்கு எதிரான ஒப்புதல்களை ரத்து செய்துள்ளது.
MITI விதித்த நிபந்தனைகளை மீறியதாக புகார் அளிக்கப்பட்ட சுமார் 35 நிறுவனங்களுக்கு எதிராக விசாரணை நடந்து வருவதாக அதன் அமைச்சர் முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார்.
“நிறுவனங்களிடையே நிபந்தனைகளை மீறும் வழக்குகள் ஏதேனும் காணப்பட்டால் பொதுமக்கள் நேரடியாக காவல்துறை அல்லது MITI-க்கு புகார் அளிக்கலாம்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.