வோங் கா வோ Seda-விலிருந்து நீக்கப்பட்டார்

கிழக்கு பேராக் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் கா வோ, தேசிய கூட்டணியின் (பி.என்.) புதிய அரசாங்கத்தால் நிலையான எரிசக்தி மேம்பாட்டு ஆணையத்தின் (செடா) Pihak Berkuasa Pembangunan Tenaga Lestari (Seda) தலைவர் பதவியில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளார்.

“எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து நேற்று செடாவின் தலைவராக பணிநீக்கம் செய்யப்பட்ட கடிதம் எனக்கு வந்தது”.

“இந்த பணிநீக்கம் குறித்து எனக்கு ஆச்சரியம் ஏதும் இல்லை. நாடு கோவிட்-19 பாதிப்பை எதிர்கொண்டு இருக்கும் போதிலும், அவர்களின் அனைத்து நியமனங்களையும் உறுதி செய்வதில் பெரிக்காத்தான் அரசாங்கம் இன்னும் தீவிரமாக செயல்பட முடிகிறது. புதிய நியமனங்கள் குறித்து பெரிக்காத்தான் அரசாங்கம் பல்வேறு அமைச்சகங்கள் மூலம் காட்டும் ‘திறனை’ பாராட்ட தான் வேண்டும்,” என்று வோங் நேற்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

வோங்கைத் தவிர, கோத்தா கினாபாலு எம்.பி. சான் ஃபூங் ஹின் ஏப்ரல் 12 ஆம் தேதி அன்று லாபுவன் துறைமுக ஆணையத்தின் (எல்பிஏ)/Lembaga Pelabuhan Labuan (LPA) தலைவராக நீக்கப்பட்டார். அதே நேரத்தில் பேராக்கில் உள்ள கிராம சமூக மேலாண்மை கவுன்சிலின் (எம்.பி.கே.கே)/Majlis Pengurusan Komunitஇ Kampung (MPKK) சேவைகளும் நிறுத்தப்பட்டன.