நடமாட்டக் கட்டுபாடு உத்தரவை மீறும் அரசியல் பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது காவல்துறையினரின் பொறுப்பு

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறுவதன் மூலம் யாரும் சட்டத்தை மீற முடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி கூறியுள்ளார்.

கூட்டம் கூடி, நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறிய “உயர்மட்ட நபர்கள்” பற்றி கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
“நான் குறிப்பிட்ட படி, யாரும் சட்டத்தை மீற முடியாது. அது தான் அடிப்படை”.

“இது குறித்து மூன்று போலிஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை நான் அறிகிறேன்”.

“எனவே, நடவடிக்கை எடுப்பது காவல்துறையினரின் பொறுப்பாகும்” என்று அவர் இன்று ஆன்லைனில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

தேசிய கூட்டணியின் பல தலைவர்கள் கூட்டமாக உணவருந்தி மகிழ்ந்த புகைப்படங்கள் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, பரவலான விமர்சனங்களை பெற்றுள்ளன.

அவர்களில், துணை சுகாதார அமைச்சர் நூர் அஸ்மி கசாலி ஆகியோரும் அடங்குவர்.

அவரும் பேராக் மாநில எக்ஸ்கோ ரஸ்மான் ஜகாரியாவும் ஒரு விழாவில் குழுவுடன் உணவை உண்டு மகிழ்ந்ததை அடுத்து இது நடந்துள்ளது.

மேலும், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலத்தின் போது, திரங்காணு மந்திரி புசார் அகமட் சம்சூரி மொக்தார், முன்னாள் மந்திரி புசார் அஹ்மத் சையத்தை கெமாமான் தெலுக் கலோங்கில் உள்ள அவரது இல்லத்தில் பார்க்கச் சென்ற புகைப்படங்களும் பகிரப்பட்டன.