நாடு திரும்பிய மலேசியர்களை தனிமைப்படுத்தியதன் மூலம் கிளஸ்டர் தவிர்க்கப்பட்டதாக அரசு கூறுகிறது

வெளிநாட்டிலிருந்து திரும்பிய மலேசியர்களை கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த அரசாங்கம் எடுத்த முடிவை மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி இன்று பாராட்டினார்.

அவர்களுல் 17 நேர்மறையான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த 17 குடிமக்களும் வீட்டிற்குச் சென்று தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு கிருமியை பரப்புவதிலிருந்து தடுக்கப்பட்டதால் ஒரு புதிய கிளஸ்டர் தவிர்க்கப்பட்டது என்று அவர் கூறினார்.

ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கிய நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் இரண்டாம் கட்டத்திற்கு முன்னர், வெளிநாட்டிலிருந்து திரும்பும் குடிமக்கள் தங்கள் வீட்டிலேயே தங்களை சுய தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

எவ்வாறாயினும், தேசிய பாதுகாப்பு கவுன்சில், பின்னர் நாட்டிற்கு வரும் அனைவரும் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது.

“நாங்கள் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் மூலம் கோவிட்-19 சங்கிலியை உடைக்க முடியும் என்று நம்புகிறோம். வெளிநாட்டிலிருந்து திரும்பி வருபவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலை அறிமுகப்படுத்தியது சரியான நடவடிக்கை என்று நான் நம்புகிறேன்”.

“பலர் இது குறித்து திருப்தியடையவில்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் சுகாதார அமைச்சகத்திலிருந்து எங்களுக்கு கிடைத்த தகவல்களின் படி, அவர்களிடமிருந்து 17 நேர்மறையான பதிப்புகள் இருப்பதைக் காட்டியுள்ளது”.

“நாங்கள் அவர்களை வீட்டிற்கு செல்ல அனுமதித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்… அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கிருமி பரவியிருக்கும், இந்த குடும்ப உறுப்பினர்கள் சந்தைக்கு வெளியே சென்றிருந்தால், நிச்சயமாக ஒரு புதிய கிளஸ்டர் தொடங்கியிருக்கும். எங்களால் இதைக் கட்டுப்படுத்த முடிந்தது,” என்று இஸ்மாயில் இன்று பிற்பகல் புத்ராஜெயாவில் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.