MCO – இன் போது சொந்தப் பகுதியைப் பாதுகாப்பதற்கான சமூக முயற்சியை அரசாங்கம் வரவேற்கிறது

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது கோவிட்-19 பாதிப்பைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சமூகம் தனது சொந்த பகுதியைக் கட்டுப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் வரவேற்கிறது என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

இந்த முயற்சிகளை மேற்கொள்ள நாடு தழுவிய சமூகங்கள் ஊக்குவிக்கப்படுகையில், இந்த முயற்சிகளைச் செயல்படுத்துவதில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து காவல்துறையினரின் ஆலோசனையைப் பெறுமாறு இஸ்மாயில் வலியுறுத்தினார்.

“நாங்கள் இம்முயற்சியை வரவேற்கிறோம். ஆனால், சில விதிகள் உள்ளதால் அவர்கள் காவல்துறையினரிடம் சொல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக, அவர்களால் பிறரை கைது செய்ய முடியாது”.

“அவர்கள் தங்கள் சமூகங்களை கவனித்துக் கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஆனால் தயவுசெய்து எந்தவொரு தேவையற்ற சம்பவங்களையும் தவிர்க்க காவல்துறையினருடன் கலந்தாலோசிக்கவும். எனவே அவர்களால் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பது குறித்து காவல்துறையினருடன் கலந்தாலோசிக்கவும்” என்று பாதுகாப்பு அமைச்சர் புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.