சீனாவின் வெற்றி தோல்விகளைப் பற்றி அறிய விரும்புகிறோம் என்கிறார் நூர் ஹிஷாம்

நேற்று சீனாவில் இருந்து மருத்துவக் குழு ஒன்று மலேசியாவை அடைந்தது. வெற்றியோ தோல்வியோ, கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில், அந்நாடு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை அக்குழுவின் மூலம் சுகாதார அமைச்சினால் அறிய முடியும் என்று டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

பாதிப்பை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்த இது உதவும் என்று அவர் கூறினார்.

“சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி அடிப்படையில் இரு தரப்பும் கலந்து பேச முடியும். அவர்களின் வெற்றிகள் பற்றி மட்டுமல்லாமல், அவர்கள் செய்த தவறான, மற்றும் தோல்வி கண்ட விஷயங்களைப் பற்றியும் இருக்கலாம்”.

“எனவே அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நாங்கள் கற்றுக்கொள்ள விரும்புகிறோம். குறிப்பாக அவர்கள் மேற்கொண்டு தோல்வியடைந்த முயற்சிகள் பற்றி கற்றுக்கொள்ள விரும்புகிறோம். அதன் மூலம் நாம் அந்த விஷயத்தை மீண்டும் செய்யக்கூடாது என்பதை கற்றுக் கொள்ளலாம்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பல்வேறு துறைகளில் உள்ள எட்டு நிபுணர்களைக் கொண்ட குழுவின் வருகை, நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக அல்ல, அவர்களின் அனுபவங்களையும் தகவல்களையும் பரிமாறிக்கொள்வதற்கே என்று அவர் மேலும் கூறினார்.